ADDED : ஏப் 10, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
பாப்பாரப்பட்டி : பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டு பகுதியில், 200 மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, சாலைவசதி, தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் மற்றும் சுடுகாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
இதுகுறித்து, பாப்பாரப்பட்டி பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மக்கள் கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிகையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த மக்கள் நேற்று மாலை, 5:00 மணிக்கு, பென்னாகரம் -- பாப்பாரப்பட்டி சாலையில், நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக, பேனர் வைத்து, மறியலில் ஈடுபட்டனர்.
பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி கலைந்து போக செய்தனர்.
