/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
/
தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
ADDED : டிச 21, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் புதுசந்தைமேட்டை சேர்ந்தவர் ஜவஹர். இவருக்கு சொந்தமான ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர், நேற்றிரவு, 7:05 மணிக்கு அரூர் கடை-வீதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது, திடீரென ஸ்கூட்டியில் இருந்து புகை வரத்துவங்கி, தீப்பி-டித்து மளமளவென எரியத் துவங்கியது. பொது-மக்கள் தகவலின் படி, அரூர் தீயணைப்புத்துறை-யினர் சம்பவ இடம் வந்து, 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து நாசமானது.

