ADDED : செப் 02, 2026 05:58 AM
தர்மபுரி:மின்
துறையில் தனியார் மயமாக்கல் கொள்கைகளை திரும்ப பெற வலியுறுத்தி,
சி.ஐ.டி.யு., மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், தர்மபுரி
மின்வாரிய செயற்பொறியாளர் அலுவகம் முன், நேற்று கண்டன
ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
மாநில துணைத்தலைவர் ஜீவா மாவட்ட செயலாளர் லெனின் மகேந்திரன் உட்பட
பலர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.
இதில், ஸ்மார்ட் மீட்டர்
பொருத்தும் திட்டத்தில், தனியார் முறையை கைவிட்டு மின்வாரிய நிர்வாகமே
பராமரிக்க வேண்டும். ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும்
பணியாளர்களை நிரந்தரம் செய்து பணியமர்த்த வேண்டும். மின்வாரிய
பணிகளை தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் கூட்டமைப்பான பிரைவேட்
பப்ளிக் பாட்னர்ஷிப் முறையில் மேற்கொள்வதை கைவிட வேண்டும். மின்வழி
தடங்கள் அமைப்பதை, தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை கைவிட
வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
