/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி
/
மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி
ADDED : மே 17, 2025 01:46 AM
பாப்பிரெட்டிப்பட்டி, :தர்மபுரி மாவட்டம், பாப்பி
ரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 39. இவர் ஏ.பள்ளிப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, ஏ.பள்ளிப்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள மின் கம்பத்தில் உள்ள பழுதை நீக்க, மின்வாரிய ஊழியர்கள் முனுசாமி, நடராஜ், ராஜா ஆகியோர் சென்றனர்.
அப்போது முனுசாமி மின்சாரத்தை துண்டிக்க சென்றார். இந்நிலையில், மின்சாரத்தை துண்டித்த தகவல் வரும் முன்பாகவே, ராஜா மின் கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி ராஜா துாக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராஜா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.