ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அனுப்பிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அனுப்பிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ADDED : ஏப் 23, 2026 05:36 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பென்னா-கரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், என, 5 சட்டசபை தொகுதிகளில், 83 பேர் போட்டியிடு-கின்றனர். இதில், பாலக்கோடு சட்டசபை தொகு-தியில், 312 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதேபோல் பென்னாகரம், 320, தர்மபுரி, 320, பாப்பிரெட்டிபட்டி, 322, அரூர், 322 என, 1,596 ஓட்-டுச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்-ளது.
ஓட்டுப்பதிவிற்கான முன்னேற்பாடு பணிகளை அந்தந்த பகுதியை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கவனித்து வருகின்றனர். ஓட்டுப்ப-திவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நேற்று நடந்தது. தர்மபுரி தாசில்தார் அலுவல-கத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னனு ஓட்டுப் ப-திவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்-புடன் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு தேவை-யான பொருட்களுடன், மண்டல அலுவலர்கள் மற்றும் ஓட்டுப்பதிவு மைய அலுவலர்களுடன் அனுப்பி வைக்கும் பணிகள் நேற்று நடந்தது. இதை, மாவட்ட கலெக்டர் சதீஷ், ஆய்வு செய்து ஓட்டுச்சாவடி மையங்களுக்கும் அனுப்பப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரியான நேரத்-திற்குள் அனுப்பி வைக்க அலுவலர்களுக்கு அறி-வுறுத்தினார். இதேபோன்று தர்மபுரி மாவட்-டத்தில் உள்ள, 5 சட்டசபை தொகுதிகளிலும், மின்னனு ஓட்டுபதிவு இயந்திரங்கள், ஓட்டுப்ப-திவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
