/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பயிர்களை நாசம் செய்த யானைகள் விரட்டியடிப்பு
/
பயிர்களை நாசம் செய்த யானைகள் விரட்டியடிப்பு
ADDED : மே 27, 2025 02:10 AM
தளி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளி காப்புக்காட்டில் கடந்த சில வாரங்களாக, 4 யானைகள் முகாமிட்டிருந்தன. இரவில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. நேற்று முன்தினம் இரவு வனத்திலிருந்து வெளியேறிய யானைகள், தளி அடுத்த தம்மாபுரம் கிராமத்திற்குள் புகுந்து, அப்பகுதியில் அரை ஏக்கர் பீன்ஸ் தோட்டம், ஒரு ஏக்கரில் விளைந்திருந்த முட்டைக்கோஸ் மற்றும் 3 மா மரங்களை சேதப்படுத்தின.
நேற்று காலை வரை அப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள், அங்கிருந்த ஏரியில் கும்மாளமிட்டன. வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். தமிழக எல்லையிலுள்ள பேலகரை கிராமம் வழியாக சென்ற யானைகள், கர்நாடகா மாநிலம், தம்மநாயக்கனப்பள்ளி வனப்பகுதிக்குள் சென்றன. தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வந்த யானைகள், கர்நாடகா மாநில வனப்பகுதிக்குள் சென்றதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.