ADDED : டிச 23, 2025 06:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி அடுத்துள்ள கடத்துாரை சேர்ந்த தமிழரசன், 28. இன்ஜினியரிங் படித்து விட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்தவர், நேற்று காலை மாயமானார். நேற்று மதியம், 12:00 மணிக்கு அவருடைய வீட்டின் அருகிலிருந்த ரயில் பாதையில் சடலமாக தமிழரசனை, ரயில்வே போலீசார் மீட்டனர். விசாரணையில், ரயில்வே தண்ட வாளத்தை கடந்த சென்றபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதி தமிழரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். தர்மபுரி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

