/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொழில் முனைவோருக்குவிழிப்புணர்வு கருத்தரங்கு
/
தொழில் முனைவோருக்குவிழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : அக் 27, 2024 01:23 AM
தர்மபுரி, அக். 27-
ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பின் சார்பில், தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம், மாவட்ட தொழில் மையத்தில் நடந்தது.
இதில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மக்களுக்கு தொழில் வாய்ப்புகள், புதிய தொழில் துவங்குதல், அரசு மானிய திட்டம், சந்தை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், வங்கியில் கடன் பெறுவதற்கான வழிகாட்டு முறைகள், நிதி மேலாண்மை குறித்து, மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் ராமஜெயம் பேசினார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் கலைவாணன் அரசு வழங்கும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். இதில், தர்மபுரி ஆதிதிராவிடர் வர்த்தக மற்றும் தொலைநோக்கு பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஆனந்தசெல்வம், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மகேந்திரன் உள்பட, 50க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.