ADDED : ஏப் 01, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி,அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நாளை தர்மபுரியில், அ.தி.மு.க., மற்றும், பா.ம.க., வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையொட்டி நாளை (ஏப்.2) அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தர்மபுரி டவுன் வள்ளலார் திடலில், மாலை, 4:00 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., மற்றும், பா.ம.க., வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான, ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகின்றனர்.
