/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா
/
அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 11, 2025 02:39 AM
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சமத்-துவ பொங்கல் விழா, தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது.
பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நடந்த பொங்கல் விழாவில், மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ஒன்றிணைந்து வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர். முன்னதாக, செவிலியர்கள் வண்ண கோலமிட்டு கரும்பு, வாழை, மஞ்சளுடன் புதுப்பா-னையில் பொங்கலிட்டு பொங்கலோ, பொங்கல் என்று ஆரவாரத்-துடன் தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து சமத்-துவ பொங்கல் விழா கொண்டாடினர்.பின், உறி அடித்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்-சிகள் நடத்தப்பட்டன. டாக்டர்கள் சசிரேகா, ஜெகதீசன், மருந்தா-ளுனர்கள் முத்துசாமி, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்-டனர். இதேபோல், தர்மபுரி அரசு மருத்துவமனை, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி, செந்தில்நகர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி என, மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்லுாரி-களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணையில், சுற்றுலா துறையின் மூலம் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், மாவட்ட கலெக்டர் சாந்தி பொங்கல் வைத்து கொண்டாடினார். கோலப்போட்டி, தப்பாட்டம், ஒயிலாட்டம், உறிஅடித்தல், கயிறு இழுத்தல் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அரசு அலுவ-லர்கள், மகளிர் குழுக்கள், பொதுமக்கள், இலங்கை தமிழர்கள் கலந்து கொண்டனர்.
பொங்கல் நாளில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என, உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மகளிர் திட்ட இயக்குனர் லலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* அரூர் டவுன் பஞ்., அலுவலக வளாகத்தில், பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. டவுன் பஞ்., தலைவர்
இந்திராணி தலைமை வகித்தார். விழாவில், துாய்மை பணியாளர்-களுக்கு கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்-டவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.