/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
செவித்திறன் குறையுடையோர் அரசு பள்ளிக்கு உபகரணங்கள்
/
செவித்திறன் குறையுடையோர் அரசு பள்ளிக்கு உபகரணங்கள்
செவித்திறன் குறையுடையோர் அரசு பள்ளிக்கு உபகரணங்கள்
செவித்திறன் குறையுடையோர் அரசு பள்ளிக்கு உபகரணங்கள்
ADDED : மார் 17, 2024 02:41 AM
தர்மபுரி:செவித்திறன் குறையுடையோருக்கான, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்கு சி.எஸ்.ஆர்., நிதி மூலம், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆய்வக உபகரணம் மற்றும் ஸ்மார்ட் போர்டுகளை, தர்மபுரி கலெக்டர் சாந்தி நேற்று வழங்கினார்.
தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்கு, ஓசூர் டைட்டான் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதி மூலம், 20 பென்ச், 10 மின் விசிறிகள், 25 எல்.இ.டி., பல்புகள், ஆய்வக உபகரணங்கள், 2 நாப்கின் வென்டிங் மெஷின்கள், இன்சினேட்டர்கள், 3 ஸ்மார்ட் போர்டுகள், 3 அறிவிப்பு பலகைகள் மற்றும் முதலுதவி பெட்டி உள்ளிட்ட, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆய்வக உபகரணங்கள் மற்றும் வகுப்பறைக்கான ஸ்மார்ட் போர்டுகளை தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, டைட்டான் நிறுவன மேலாளர் வைரவேல், பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினா மேரி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

