/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சரக செஸ் விளையாட்டு போட்டியில் இ.ஆர்.கே., பள்ளி மாணவர்கள் சாதனை
/
சரக செஸ் விளையாட்டு போட்டியில் இ.ஆர்.கே., பள்ளி மாணவர்கள் சாதனை
சரக செஸ் விளையாட்டு போட்டியில் இ.ஆர்.கே., பள்ளி மாணவர்கள் சாதனை
சரக செஸ் விளையாட்டு போட்டியில் இ.ஆர்.கே., பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : செப் 20, 2024 01:37 AM
சரக செஸ் விளையாட்டு போட்டியில்
இ.ஆர்.கே., பள்ளி மாணவர்கள் சாதனை
அரூர், செப். 20-
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான, செஸ் விளையாட்டு போட்டிகள், மோளையானுார் வெற்றி விகாஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல கலந்து கொண்டன. இதில் பங்கேற்ற எருமியாம்பட்டி இ.ஆர்.கே., மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நிவேதனன் முதலிடமும், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நிஷாந்தன் இரண்டாம் இடமும், ஸ்ரீதர் மூன்றாம் இடமும், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவி புகழரசி மூன்றாம் இடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் தீத்துமாலையை, இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்.