ADDED : ஜூலை 19, 2025 01:32 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம் :தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தி.மு.க., மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் மேற்கு மாவட்ட செயலர் பழனியப்பன் தலைமையில் நடந்தது. தொகுதி பார்வையாளர் அரியப்பன், மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், 40 சதவீதம் உறுப்பினர்களை புதிதாக சேர்க்கும் பணியில் ஈடுபடுவது குறித்தும், 18 வயது பூர்த்தியானவர்களை இணைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.தொகுதி பார்வையாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
