தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ எக்ஸ்பிரஸ் ரயில் மொரப்பூரில் நின்று செல்ல வலியுறுத்தல்

எக்ஸ்பிரஸ் ரயில் மொரப்பூரில் நின்று செல்ல வலியுறுத்தல்

எக்ஸ்பிரஸ் ரயில் மொரப்பூரில் நின்று செல்ல வலியுறுத்தல்


ADDED : ஜன 27, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 06:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ரயில் பயணிகள் சங்க பொதுச்செயலாளர்

ரகுநாதன், இணைச் செயலாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோர், மத்திய அமைச்சர் முருகனிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் கடந்த, 1861ல் ரயில்வே ஸ்டேஷன் துவங்கப்பட்டது. 165 ஆண்-டுகள் பழமையான, மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷன் தென்னக ரயில்வேயின் கீழ் செயல்-பட்டு வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்-டங்களை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள் என, தினமும், 3,000க்கும் மேற்பட்டோர் இந்த ரயில்வே ஸ்டேஷன் வழியாக, பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். சேலம் - ஜோலார்-பேட்டை வழித்தடத்தில் அமைந்துள்ள மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளின் நலன் கருதி, மங்களூரு - சென்னை செல்லும் எக்ஸ்-பிரஸ் ரயில், மொரப்பூரில் நின்று செல்ல நடவ-டிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், டில்லி - திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ், சந்திரகாரா - மதுரை - சந்திரகாரா, பெங்களூரு - திருவனந்தபுரம் ரயில் ஆகியவை மொரப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us