ADDED : செப் 21, 2026 02:12 AM
அ நிறம் | அளவு
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 3,000 கன அடியாக சரிந்தது.
தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், தேன்கனிக்கோட்டை, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகு-திகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வ-ரத்து குறைந்துள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 4,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 3,000 கன அடியாக சரிந்துள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்து, அங்குள்ள ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில், தண்ணீர் குறைந்தளவே கொட்டுகிறது. காவிரியாற்றில் பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நேற்று, 8வது நாளாக தடையை நீட்டித்துள்ளது.
