/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவசாயி மூளைச்சாவு ; உடல் உறுப்பு தானம்
/
விவசாயி மூளைச்சாவு ; உடல் உறுப்பு தானம்
ADDED : ஜன 23, 2026 07:36 AM

தர்மபுரி: ஓசூர் அருகே பக்கவாதத்தால் பாதித்து மூளைச்சாவு அடைந்த விவசாயின் உடல் உறுப்-புகள், தானமாக பெறப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கன்ன-சத்திரத்தை சேர்ந்த விவசாயி முருகேஷ், 50. இவ-ருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, மூளை பாதிக்கப்பட்-டது. இதையடுத்து கடந்த, 18ல் இரவு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவ-ருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, உற-வினர்கள் முன் வந்தனர்.
அதன்படி அன்றைய தினமே அவரது இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகம், கண் ஆகியவை சென்னை மற்றும் ஈரோட்டில் உள்ள மருத்துவம-னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மூளைச்சாவு ஏற்பட்டு இறந்த முருகேஷ் உடலுக்கு, நேற்று காலை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

