ADDED : ஜன 09, 2025 08:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகேந்திரமங்கலம்: பாலக்கோடு அடுத்த, சூடப்பட்டியை சேர்ந்த விவசாயி சங்கர், 48. இவர் கடந்த, 6 அன்று தன் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில், மனைவி நந்தினியை அழைத்து சென்றார். இரவு, 9:00 மணிக்கு மாரண்டஹள்ளியில் இருந்து வெள்ளிச்சந்தை சாலையில் சென்ற-போது, வெள்ளிச்சந்தையில் இருந்து மாரண்டஹள்ளி நோக்கி வந்த, மற்றொரு ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் அவர்கள் மோதி-யதில், தம்பதி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தார். படுகாயமடைந்த நந்தினியை, மேல் சிகிச்சைக்கு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

