ADDED : ஆக 04, 2026 04:41 AM

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே தொன்னகுட்-டஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அத்திமரத்துார் குட்டாமடுவு பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 54. விவாசயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தான் சாகுபடி செய்த தக்கா-ளியை விற்பனைக்கு பென்னாகரம் மார்க்கெட்-டிற்கு டூவீலரில் கொண்டு சென்றார். தாளப்-பள்ளம் மலைப்பகுதியில் செல்லும்பொழுது யானை ஒன்று தார்ச்சாலை நடுவே குறுக்கே வந்-தது. இதில் பயந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். யானை துரத்தவே, அருகில் இருந்த தரைப்பாலத்தின் அடியில் ஓடி உயிர் தப்பினார். டூவீலரில் லைட் எரிந்ததால், யானை அந்த டூவீலர் மற்றும் தக்காளி கூடையை சேதப்படுத்-தியது. படுகாயம் அடைந்த முருகேசனை வனத்-துறையினர் மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவ-மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பென்னாகரம் வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
