/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் ஏமாற்றம்
/
பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : அக் 12, 2024 01:04 AM
பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் ஏமாற்றம்
தர்மபுரி, அக். 12-
ஆயுதபூஜையையையொட்டி பூக்கள் விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில், தர்மபுரி பூ மார்க்கெட்டில், பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, காரிமங்கலம், கம்பைநல்லூர், மொரப்பூர், நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் செயல்படும் பூ மார்க்கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இங்கு, விற்பனை செய்யப்படும் பூக்கள் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்செங்கோடு, கும்ப கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பெங்களூரு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ சன்னமல்லி, 300, குண்டுமல்லி, 300, பன்னீர் ரோஸ், 140, பட்டன்ரோஸ், 160, காக்டான், 240, ஜாதிமல்லி, 280, கோழிகொண்டை, 50, செண்டுமல்லி, 30 ரூபாய் என, விற்பனையானது. இதில் அதிகம் எதர்பார்க்கபட்ட சாமந்தி பூ கடந்த வாரங்களில் கிலோ, 250 முதல், 300 வரை விற்பனையான நிலையில் நேற்று, 7-0 ரூபாய்க்கு விற்பனையானது. ஆயுதபூஜையை ஒட்டி, விலை உயரும் என எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். நேற்று தர்மபுரி பூ மார்க்கெட்டில், 13 டன் அளவிற்கு பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.