/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அரவை துவங்காததால் விவசாயிகள் வேதனை
/
சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அரவை துவங்காததால் விவசாயிகள் வேதனை
சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அரவை துவங்காததால் விவசாயிகள் வேதனை
சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அரவை துவங்காததால் விவசாயிகள் வேதனை
ADDED : டிச 22, 2024 03:24 AM
அரூர்: சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்-கான கரும்பு அரவை துவங்காததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரத்தில், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, கரும்பை அரவைக்கு, விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டுக்கான, கரும்பு அரவையை துவங்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து பா.ஜ., மாநில விவசாய அணி செயற்குழு உறுப்-பினர் குழந்தை ரவி கூறியதாவது: கடந்தாண்டு, போதிய மழை இல்லாததால், கரும்பு சாகுபடி பரப்பு குறைந்ததுடன், வறட்-சியால் பல நுாறு ஏக்கரில் கரும்புகள் காய்ந்து போனது. மேலும், வேர்ப்புழு தாக்குதலாலும் கரும்பு காய்ந்துள்ளன. நடவு செய்து, 13 மாதங்களுக்கு மேலாகியும் உரிய பருவத்தில் கரும்புகள் வெட்டப்படாததால், கரும்பு பயிர்களில் பூக்கள் பூத்துள்ளன.
இதனால் கரும்புச்சாறு குறைந்து, எடை மற்றும் தரம் குறைவ-துடன் விவசாயிகளுக்கு மகசூல் பாதிக்கப்பட்டு கடும் நஷ்டம் ஏற்படும். மேலும் கரும்பு வெட்டும்போது, அதை ஒன்றாக சேர்த்து கட்டுவதற்கு தேவையான தோகை கிடைக்காத நிலையுள்-ளது. கடந்த காலங்களில், ஆலையில் கரும்பு அரவை தாமதமாக துவங்கப்பட்டதால், 14 மாதங்கள் ஆன கரும்புகள் கூட, வெட்ட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், தொழிலாளர்களின் பற்றாக்-குறையால், டன் ஒன்றுக்கு வெட்டுக்கூலியாக, 1,600 ரூபாய் வழங்கப்பட்டதுடன், கரும்பு வெட்ட முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் சர்க்கரை ஆலையில், கடந்த நவ., மாத இறுதிக்குள் கரும்பு அரவையை துவங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், கரும்பு அரவை துவங்கப்படவில்லை. இதனால், விவ-சாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து ஆலையின் மேலாண்மை இயக்குனர் பிரியாவிடம் கேட்ட போது, ''4.50 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படும் நிலையில், நடப்பாண்டு, 1 லட்சத்து, 30 ஆயிரம் டன் கரும்பு மட்டுமே உள்ளது. கரும்பு சாகுபடி பரப்பு குறைவாக உள்ளது. கடந்த, 19ல் ஆலையில் அரவை துவங்க திட்டமிடப்பட்டு இருந்-தது. சமீபத்தில் பெய்த கனமழையால் கரும்பு வயலில் தண்ணீர் தேங்கியுள்ளது. வரும், 28க்கு கரும்பு அரவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.