/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
/
தர்மபுரியில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
தர்மபுரியில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
தர்மபுரியில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
ADDED : ஜூன் 29, 2024 02:16 AM
தர்மபுரி: தர்மபுரியில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு காய்கறி, பழங்களை ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் சாமந்தி, சம்பங்கி, பட்டன் ரோஸ் உள்ளிட்ட பூக்களையும் பயிரிட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து உழவர் சந்தைகளில், சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே உள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம், 58 ரூபாய்க்கும் நேற்று, 60 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதையடுத்து, விவசாயிகள் தொடர்ந்து சின்னவெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தர்மபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இன்றி, சின்ன வெங்காயம் வளர்ந்து வருகிறது.