/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மேட்டூர் அணை கால்வாயில் கொட்டப்படும் மாட்டு இறைச்சி கழிவுகள்; விவசாயிகள் புகார்
/
மேட்டூர் அணை கால்வாயில் கொட்டப்படும் மாட்டு இறைச்சி கழிவுகள்; விவசாயிகள் புகார்
மேட்டூர் அணை கால்வாயில் கொட்டப்படும் மாட்டு இறைச்சி கழிவுகள்; விவசாயிகள் புகார்
மேட்டூர் அணை கால்வாயில் கொட்டப்படும் மாட்டு இறைச்சி கழிவுகள்; விவசாயிகள் புகார்
ADDED : நவ 01, 2025 01:44 AM
சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார்.
அதில் விவசாயிகள் பேசிய விபரம் வருமாறு:
சிவக்குமார்: ஆத்துார் தாலுகாவில், மாவு பூச்சி, செம்பேன் தாக்குதலால், 500 ஏக்கரில் மரவள்ளி பயிர் பாதிக்கப்பட்டு, ஏக்கருக்கு 10 டன்னுக்கு பதிலாக, 2 டன் மட்டுமே சாகுபடி கிடைத்துள்ளதால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே முறையாக கணக்கிட்டு, விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.
நாகராஜ்: மேட்டூர் அணை இடது, வலது கால்வாயில் இரவு நேரங்களில் மாட்டிறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, கால்வாய் கரையோர பகுதிகளில் நோய் பரவும் அபாயம் உள்ளது. நவப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் மகாசபை கூட்டம் 5 ஆண்டாக நடத்தப்படவில்லை. அதனால் சங்க வரவு, செலவு, நிகர லாபம், நஷ்டம் எதுவும் உறுப்பினர் களுக்கு தெரியவில்லை.
வடிவேல்: தலைவாசல், பெரியேரி கிராமத்தில், 2001ல், 32 குடும்பங்களுக்கு ஒப்படை பட்டா வழங்கப்பட்டது. அவை இதுவரை, வருவாய்த்துறை ஆவணத்தில் பதிவேற்றம் செய்யப்படாத காரணத்தால், உரிய பட்டா கிடைக்காமல், 32 குடும்பத்தினர், 24 ஆண்டாக போராடி வருகின்றனர்.
கோவிந்தராஜ்: பெத்தநாயக்கன்பாளையம், வைத்திய கவுண்டன்புதுார் ஏரியில் வண்டல்மண் அள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. 2019க்கு பின் பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர், பிரதமர் நிதியுதவி திட்டத்தில் இணைக்காமல் வேளாண் அதிகாரிகள் போக்குகாட்டுவதால், ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
செந்தில்: தாதம்பட்டி, அல்லிகுட்டை, வெங்கடாசலம் காலனி, சின்னம்மாபேட்டை உள்ளிட்ட பகுதி விளைநிலங்களின் பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்த போது, அரசு புஞ்சை என தவறாக பதிவாகி உள்ளது. அதற்காக, 4 ஆண்டாக போராடி, முந்தைய ஆர்.டி.ஒ., அபிநயா, அரசு புஞ்சைக்கு பதிலாக, ரயத்து புஞ்சை என திருத்தம் செய்யும்படி, சேலம் மைய தாசில்தார், சார் ஆய்வாளர் ஆகியோருக்கு கடந்த ஆக.,25ல் உத்தரவிட்டார். ஆனால், தாலுகா அதிகாரிகள் விவசாயிகளை அலைகழிப்பு செய்கின்றனர்.
இவ்வாறு பேசினர்.

