/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மானிய டிராக்டருக்கு பரிந்துரை அதிகாரி மீது விவசாயிகள் புகார்
/
மானிய டிராக்டருக்கு பரிந்துரை அதிகாரி மீது விவசாயிகள் புகார்
மானிய டிராக்டருக்கு பரிந்துரை அதிகாரி மீது விவசாயிகள் புகார்
மானிய டிராக்டருக்கு பரிந்துரை அதிகாரி மீது விவசாயிகள் புகார்
ADDED : ஆக 29, 2025 05:43 AM
தர்மபுரி: 'தி.மு.க., ஒன்றிய செயலர்கள் பரிந்துரை இருந்தால் தான், மானிய விலை டிராக்டர் வழங்கப்படும்' என, அதிகாரி கூறுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது.
விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பேசியதாவது:
சிப்பம் கட்டும் அறை, மானிய விலையில் டிராக்டர், மினி டிராக்டர் ஆகியவற்றை வழங்க அதிகாரிகளை அணுகினால், 'தி.மு.க., ஒன்றிய செயலர்கள், ஒன்றியக்குழு தலைவர் ஆகியோர் பரிந்துரை செய்தவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என, தமிழக வேளாண் அமைச்சரின் உதவியாளர் கூறியுள்ளார். எனவே, இந்தாண்டு வாய்ப்பில்லை' என, மொரப்பூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கூறுகிறார்.
இவ்வாறு புகார் தெரிவித்தனர்.
மொரப்பூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்கு நர் ராஜேஷ் கண்ணா கூறுகையில், ''விவசாயிகளிடம், அதுபோன்று நான் எதுவும் கூறவில்லை. டிராக்டர், மினி டிராக்டர் வேளாண் பொறியியல் துறை மூலம் தான் வழங்கப்படுகிறது,'' என்றார்.

