/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவசாயம் செய்த பெண் மீது வனத்துறையினர் தாக்குதல் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
/
விவசாயம் செய்த பெண் மீது வனத்துறையினர் தாக்குதல் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
விவசாயம் செய்த பெண் மீது வனத்துறையினர் தாக்குதல் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
விவசாயம் செய்த பெண் மீது வனத்துறையினர் தாக்குதல் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 28, 2024 02:40 AM
தர்மபுரி: 'பென்னாகரம் அருகே, வனத்தில் விவசாயம் செய்த பெண் மீது, வனத்துறையினர் தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது. இனியும் இதுபோல் நடக்காமல் இருக்க வனத்துறையினர் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசா-யிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்-தது. விவசாயிகள் பேசியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், காரிப் மற்றும் ராபி பருவத்திற்கு ஏற்ற பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இதில், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, பாதிப்பு ஏற்படும் சமயத்தில் இழப்பீடு வழங்காமல் தாமதபடுத்துகின்றனர். இதை சரி செய்ய வேண்டும். மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் உள்ள தானிய களங்கள் சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும். நீர் வழித்த-டங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக, கனமழை பெய்தபோதும் அன்-னசாகரம் ஏரி உட்பட பல ஏரிகள் நீர் வரத்தின்றி உள்ளது. எனவே, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
பென்னாகரம் அருகே, வனத்தில் விவசாயம் செய்த பெண் மீது, வனத்துறையினர் தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது. இனியும் இதுபோல் நடக்காமல் இருக்க வனத்துறையினர் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கபட்ட உண்மையான மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நடப்பாண்டு தொடக்கத்தில், வறட்சி மற்றும் வேற்புழு தாக்குதல் காரணமாக கரும்பு சாகுபடி பாதிக்கபட்டுள்ளது. எனவே, கூட்டுறவு சங்கங்களில், கரும்பு விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பேசினர்.
கலெக்டர் சாந்தி பதிலளித்து பேசுகையில், ''நீர்நிலை ஆக்கிரமிப்-புகள் குறித்து ஒவ்வொரு வாரமும் விவசாயிகள் குற்றசாட்டுகள் தெரிவிக்கின்றனர். வனப்பகுதியில் உள்ள விவசாயிகளை தாக்கி, மீண்டும் ஒரு வாச்சாத்தி சம்பவத்தை உருவாக்க வேண்டாம். மேலும், பொதுமக்களின் குறைகள் குறித்து அவ்வப்-போது நேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
கள் இறக்கும் போராட்டம்
கூட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில இளைஞரணி துணை தலைவர் உதயகுமார் பேசுகையில், ''விவ-சாயிகளின் நலன் மற்றும் வருவாய் கருதி, ஜன., 21ல் கள் இறக்க அனுமதிக்க கோரி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் உள்ள என்னுடைய தோட்டத்தில், கள் இறக்கும் போரட்டத்தை தொடங்கவுள்ளோம். இதற்காக, எதையும் சந்திக்க தயாராக உள்ளோம்,'' என, பேசினார்.

