/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சோழராயன் ஏரியில் உடைந்த மதகு சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
சோழராயன் ஏரியில் உடைந்த மதகு சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
சோழராயன் ஏரியில் உடைந்த மதகு சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
சோழராயன் ஏரியில் உடைந்த மதகு சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : செப் 29, 2025 02:10 AM
தர்மபுரி:அதியமான்கோட்டையில் உள்ள, சோழராயன் ஏரியில் உடைந்து சேதமடைந்துள்ள மதகை சீரமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை பஞ்.,ல் சோழராயன் ஏரி, 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதற்கு நீராதரமாக வத்தல் மலையில் இருந்து வரும் சனத்குமார் ஆறு மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகளின் உபரிநீர் இந்த ஏரியை வந்தடையும். இதனை நம்பி, 200 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகிறது. மேலும், சுற்றுவட்டார பகுதிகளுக்கான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த, 3 ஆண்டுகளுக்கு வநண்டு காணப்பட்ட ஏரி கடந்த ஆண்டு நவ., 31 அன்று பெஞ்சால் புயலால் பெய்த கன மழையால், சோழராயன் ஏரி உட்பட பல ஏரிகள் நிரம்பியது.
அதை தொடர்ந்து, நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்து வருவதால், நீர் இருப்பு அப்படியே உள்ளது. ஏரியை நம்பியுள்ள விவசாயிகள் நெல் சாகுபடியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ஏரியிலிருந்து, பாசன வாய்கால்களில் நீர் திறக்கப்படும் ஒரு மதகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வீணாகி வருகிறது. எனவே, மதகில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து, தண்ணீர் வீணாவதை நிறுத்த வேண்டும் என, விவசாயிகள் கடந்த வாரம் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், இனியாவது அதிகாரிகள் ஏரியை பார்வையிட்டு, உடைந்து சேதமான மதகை சீரமைக்க நடவடிக்கை எடுக்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.