/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தடுப்பணைகளை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
/
தடுப்பணைகளை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜன 03, 2024 12:25 PM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், முத்தம்பட்டி ஊராட்சியிலுள்ள வனப்பகுதியில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் குளித்து விட்டு கோவிலுக்கு செல்ல தடுப்பணைகள் ஆங்காங்கே உள்ளன. இதில் எந்நேரமும் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்த தடுப்பணைகள் வனத்துறை மூலமாக பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதனால் மலை ஆற்று பகுதியில் இருந்து அடித்து வரும் மண் நிரம்பி உள்ளது. இதனால் தண்ணீர் குறைந்த அளவு தேங்குகிறது. குளிப்பதற்க்கு பக்தர்கள், பொதுமக்கள் இறங்கும் போது சேற்றில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. வன விலங்குகள் குடிநீருக்காக அலையும் நிலை உள்ளது.
இந்த தடுப்பணையில் தேங்கும் மண்ணை அகற்றி, துார்வாரப்பட்டால், மழைக்காலங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கும். இதனால் சுற்று வட்டார கிணறுகளில் தண்ணீர் ஊறும். விவசாயம் செழிக்கும், வன விலங்குகளுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும். பக்தர்கள் குளிக்க போதுமான அளவு வசதி ஏற்படும். இது குறித்து வனத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள், பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, வனத்துறையினர் தடுப்பணைகளை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள், கோரிக்கை
விடுத்துள்ளனர்.