sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மரவள்ளி சாகுபடியில் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள் அரவை ஆலை அமைக்க வலியுறுத்தல்

/

மரவள்ளி சாகுபடியில் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள் அரவை ஆலை அமைக்க வலியுறுத்தல்

மரவள்ளி சாகுபடியில் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள் அரவை ஆலை அமைக்க வலியுறுத்தல்

மரவள்ளி சாகுபடியில் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள் அரவை ஆலை அமைக்க வலியுறுத்தல்


ADDED : ஜன 06, 2025 02:40 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: மரவள்ளி சாகுபடியில் நஷ்டத்தை தவிர்க்க, அரூர் பகுதியில் மர-வள்ளி கிழங்கு அரவை ஆலை துவங்க வேண்டும் என, விவசா-யிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மரவள்ளி கிழங்கு வறட்சியை தாங்கி வளரும் பயிர் என்பதால், தர்மபுரி மாவட்டத்தில், பெரும்பாலான விவசாயிகள், மானாவாரி-யாக, தங்களது விவசாய நிலங்களில், மரவள்ளி கிழங்கை சாகு-படி செய்து வருகின்றனர். அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, நரிப்-பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், ஆண்டுதோறும், 30,000 ஏக்கருக்கு மேல் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்-பட்டு வருகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் மரவள்ளி கிழங்கு, இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு, அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகி-றன்றன. ஆண்டுதோறும் முத்தரப்பு கூட்டம் நடத்தி, மரவள்ளி கிழங்குக்கு அரசு விலை நிர்ணயம் செய்வதில்லை. ஆலை உரி-மையாளர்களே விலை நிர்ணயம் செய்கின்றனர். இதனால், மர-வள்ளி கிழங்குக்கு உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதை தவிர்க்க, தர்ம-புரி மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு அரவை ஆலை அமைக்க, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த போதிலும், இதுவரை துவங்கப்படவில்லை. எ.டி.திருமலை, தலைவர், அரூர் அன்னை பசுமைபூமி துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம்: தர்மபுரி மாவட்டத்தில் ஸ்டார்ச், ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகள், 19 இருந்தன. ஆனால், தற்போது, சில ஆலைகள் மட்டும் செயல்பாட்டில் உள்ளன. இதிலும், 50,000 டன்னுக்கு குறைவாகவே அரவை செய்யப்படுகிறது. இதனால், சேலம், ஆத்துார் பகுதிகளிலுள்ள ஆலைகளுக்கு செல்ல வேண்டி நிலையுள்ளதால், விவசாயிகளுக்கு போக்குவ-ரத்து செலவு கூடுதலாகிறது.

கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படுவதால் தான், தனியார் மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் முறையாக செயல்படு-கின்றன. ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதல் செய்வதால் தான், தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்படுகின்றன. அதேபோல், மரவள்ளிக்கும் அரசு மூலம் அரவை ஆலை இருந்தால், தனியார் ஆலைகளும் முறையக செயல்பட வாய்ப்பாக இருக்கும். எனவே, அரசு மூலம் மரவள்ளி அரவை ஆலை அமைக்க மாவட்ட தொழில்மையம் மூலம் திட்ட மதிப்பீடு பெற்று, அரசுக்கு முன்மொழிவு அனுப்ப கலெக்டர் ஆவண செய்ய வேண்டும்.

குழந்தை ரவி, செயற்குழு உறுப்பினர், பா.ஜ., மாநில விவசாய அணி, எல்லப்புடையாம்பட்டி: நடப்பாண்டில் பெய்த கனம-ழையால், மரவள்ளிக்கிழங்கு வயல்களில், தண்ணீர் தேங்கி அழுக துவங்கியது. இதையடுத்து, ஒரே நேரத்தில் மரவள்ளிக்கி-ழங்கை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடு-பட்டனர். ஆனால், போதியளவில் கூலி ஆட்கள் இல்லாததால், மரவள்ளி கிழங்கை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.

இதை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் ஒரு டன் மரவள்ளி கிழங்கை, 2,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். அதற்கு அறுவடை கூலியாக, தொழிலாளர்களுக்கு டன் ஒன்றுக்கு, 1,500 ரூபாயை விவசாயிகள் வழங்கினர். மீதம், 500 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்ததால், கடும் நஷ்டம் ஏற்பட்டது. ஆண்டுதோறும் மரவள்ளி கிழங்குக்கு, முத்தரப்பு கூட்டத்தை கூட்டி, விலை நிர்ணயம் செய்வதில்லை. இதனால், விவசாயிகள் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த, 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில், தர்மபுரியில் மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் நிலையம் மற்றும் நவீன மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலை துவங்கப்படும் என, தி.மு.க., அறிவித்தது. எனவே, அதன்படி, மரவள்ளி அரவை ஆலை விரைந்து துவங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us