/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் பரவலான மழை விவசாயிகள் மகிழ்ச்சி
/
அரூரில் பரவலான மழை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 07, 2024 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் இரவு, 10:00 முதல், நேற்று அதிகாலை, 5;00 மணி வரை, அரூர், பெரியப்பட்டி, தீர்த்தமலை, நவலை, மோப்பிரிப்பட்டி, சோரியம்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, தொட்டம்பட்டி, ஈச்சம்பாடி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.
இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. நேற்று பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.