sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூரில் கன மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

/

அரூரில் கன மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

அரூரில் கன மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

அரூரில் கன மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்


ADDED : டிச 03, 2024 07:14 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக

பெஞ்சல் புயல் காரணமாக இடைவிடாது கன-மழை கொட்டித் தீர்த்தது. இதனால்,

அரூர் பகுதியில் உள்ள தடுப்-பணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி

வழிகின்றன. தொடர்ந்து, ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், நீர்-வரத்து

கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பால் அருகேயுள்ள விளை நிலங்களில்

புகுந்தும், தேங்கியும் உள்ளது. இதனால், நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, செல்லம்பட்டி,

எல்லப்புடையாம்-பட்டி, கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, ஒடசல்பட்டி,

கூக்கடப்பட்டி, பேதாதம்பட்டி, கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதி-களில், சில நுாறு

ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த நெல், மரவள்ளிக்கிழங்கு,

மக்காச்சோளம், மஞ்சள், வாழை பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பல ஆயிரம் ரூபாய்

செலவு செய்து சாகு-படி செய்திருந்த பயிர்கள் நீரில் மூழ்கி, அழுக தொடங்கியதை

கண்டு, விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதனால், பல லட்சம் ரூபாய் இழப்பு

ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்-துள்ள விவசாயிகள் வேளாண் துறை

அலுவலர்களை கொண்டு, முறையாக கணக்கெடுத்து சேதமடைந்துள்ள

பயிர்களுக்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடித்து சென்ற தரைப்பாலம்அரூர் அடுத்த வேப்பம்பட்டி பஞ்.,க்கு உட்பட்டது பூதிநத்தம். கனமழையால்,

பூதிநத்தத்திற்கு செல்லும் வழியில் உள்ள காட்-டாற்றில் வெள்ளப்பெருக்கு

ஏற்பட்டது. இதனால், காட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் நேற்று

முன்தினம் இரவு நீரில் அடித்துச் செல்லப்பட்டது. மாவட்ட கண்காணிப்பு அலு-வலர்

மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர்

திவ்யதர்ஷினி நேற்று பூதிநத்தம் கிரா-மத்திற்கு சென்று அடித்துச் செல்லப்பட்ட

தரைப்பாலத்தை பார்-வையிட்டார். அரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்

உடனிருந்தனர்.

குடியிருப்புகளில் மழைநீர்அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக கன-மழை பெய்தது.

இதனால், அரூரில், திரு.வி.க., நகர் மேற்கு, தில்லை நகர், மேல்பாட்சாபேட்டை, அரசு

மகளிர் மேல்நிலைப்-பள்ளி பின்புறம், அம்பேத்கர் நகர் புது காலனி, ஆத்தோர வீதி

உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட

மக்கள் அவதியடைந்ததுடன், நீரை வாளி கொண்டு வெளியே வாரி இறைத்தனர். ஏரிகள் நிரம்பல்

அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பெய்த தொடர்மழையால், சங்-கிலிவாடி ஏரி,

கோணம்பட்டி ஏரி மற்றும் எல்லப்புடையாம்-பட்டி, செல்லம்பட்டி, லிங்காபுரம்,

பெரமாண்டப்பட்டி, மாம்-பட்டி, கணபதிப்பட்டி ஏரிகள் நிரம்பின. அரூர் பகுதியில், 90

சத-வீதத்திற்கு மேலான ஏரிகள் நிரம்பியுள்ளன.

வெள்ளக்காடான சாலைகள்அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு

பருவமழையால், தடுப்பணைகள், ஏரிகள் உள்-ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி

வழிகின்றன. தொடர்ந்து, தடுப்ப-ணைகள், ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும்

உபரிநீர், நீர்வ-ரத்து கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு மற்றும் ஆக்கிர-மிப்பால்

விளை நிலங்களில் புகுந்தும், தேங்கியும் உள்ளது. மேலும், சாலைகளிலும் வெள்ள நீர்

பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று காலை, அரூர் -பேதாதம்பட்டி சாலை, அரூர் -

தீர்த்த-மலை சாலை, அரூர் - கடத்துார் சாலை, ஈச்சம்பாடி -மருதிப்-பட்டி சாலை

உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்-கெடுத்து ஓடியது.

நீரில் மூழ்கிய கோவில்அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில்

சென்னியம்மன் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும்

கனமழையால், தென்பெண்ணை-யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், டி.அம்-மாபேட்டையிலுள்ள சென்னியம்மன் கோவில் மற்றும் திருப்-பாறை

நீரில் மூழ்கியுள்ளது.

உருண்ட ராட்சத பாறைஅரூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், நேற்று

முன்தினம் இரவு சித்தேரி மலைப்பாதையின் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

மேலும், மலைப்பா-தையில் ராட்சத பாறை உருண்டு வந்து சாலையில் விழுந்தது.

அப்போது, வாகனங்கள் ஏதும் செல்லாததால், அசம்பாவிதம் ஏற்-படவில்லை.

இச்சம்பவத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாச்சாத்தி ஏரியில் உடைப்புஅரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், பெஞ்சல் புயலால் நேற்று முன்தினம் இரவு

கனமழை பெய்தது. நேற்று முன்தினம் காலை முதல், நேற்று காலை வரை, 33 செ.மீ.,

மழை கொட்டித் தீர்த்தது. இதனால், வாச்சாத்தி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தொடர்ந்து, நீர் வெளியேற வழியின்றி, உபரிநீர் வெளியேறும் பகுதியில் நேற்று

அதிகாலை உடைப்பு ஏற்பட்டது. இதனால், வாச்சாத்தி, கூக்கடப்பட்டி பகுதியிலுள்ள வயல்வெளி-களில் தண்ணீர்

புகுந்ததால் நெல், மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.

கன மழையால், கடந்த, 1994ல் வாச்சாத்தி ஏரி உடைந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு தற்போது ஏரி உடைந்ததாக, கிராம மக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us