/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மரவள்ளிகிழங்கு விலை கடும் சரிவு கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
/
மரவள்ளிகிழங்கு விலை கடும் சரிவு கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
மரவள்ளிகிழங்கு விலை கடும் சரிவு கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
மரவள்ளிகிழங்கு விலை கடும் சரிவு கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
ADDED : அக் 26, 2025 01:07 AM
அரூர், மரவள்ளி கிழங்கு விலை கடுமையாக சரிந்துள்ளதால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் நடப்பாண்டு, 30,000 ஏக்கரில் மரவள்ளிகிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த, இரண்டு மாதங்களாக அறுவடை பணி நடக்கிறது. கடந்த, 22ல் பெய்த மழையால் கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, தீர்த்தமலை, பொய்யப்பட்டி, வீரப்பநாயக்கன்பட்டி, மாம்பாடி, கீழானுார், மாம்பட்டி, செல்லம்பட்டி, கீரைப்பட்டி, அச்சல்வாடி உள்ளிட்ட கிராமங்களில், தாழ்வான பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அழுகி வருகிறது. இதையடுத்து, ஒரே நேரத்தில் கிழங்கை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், போதிய அளவு கூலி ஆட்கள் இல்லாததால், அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், ஒரு டன் மரவள்ளிகிழங்கு, 6,000 ரூபாய்க்கு இடைத்தரகர்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தனர். தற்போது, கனமழை பெய்ததால் தாழ்வான பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கிழங்குகள் அழுகி வருகிறது. மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள சில ஆலைகளுக்கு கொண்டு சென்றால், கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். அதே போல், தர்மபுரி மாவட்டத்திலும் ஆலைகள் திறக்கப்படவில்லை. இதை பயன்படுத்தி ஒரு டன் மரவள்ளி கிழங்கை, 4,000 முதல், 5,000 ரூபாய்க்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இவ்வாறு கூறினர்.

