/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆலை நிர்வாகத்திடம் விவசாயிகள் வலியுறுத்தல்
/
ஆலை நிர்வாகத்திடம் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : செப் 04, 2024 10:10 AM
அரூர்: சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இணை மின் நிலையம் அமைக்க, பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என, கரும்பு விவசாயிகள் வலியு-றுத்தி உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 90 கோடி ரூபாய் மதிப்பில், இணை மின்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகளின் பங்களிப்பாக, 10 சதவீத தொகையான, 9 கோடி ரூபாய் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த, 2007 - 08ல், ஆலைக்கு கரும்பு அனுப்பிய, 7,182 விவசாயிகளிடம் இருந்து, டன் ஒன்றுக்கு, 90 ரூபாய் வீதம் என, 4.02 கோடி ரூபாய் பெறப்பட்டது. இதற்காக பிடித்தம் செய்-யப்பட்ட பணத்தை, திருப்பித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி.மு.க., வாக்குறுதிகுழந்தை ரவி, கீரைப்பட்டி: இணைமின் நிலையம் அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர், 45 மாதங்க-ளுக்குள் முடிக்க வேண்டும் என்ற விதி முறை இருந்தும், பணி முடிக்கப்படாமல் கிடப்பில் உள்-ளது.
தற்போது, மழை மற்றும் வெயிலில் காய்ந்து, இயந்திரங்கள் துருப்பிடித்த நிலையில் உள்ளன. கடந்த, 2017ல் ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில், பொருட்கள் எரிந்து நாசமா-யின. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இணைமின் நிலையம் அமைக்கும் பணி துவங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. ஆனால், மூன்றரை ஆண்டுகளாகியும் பணிகள் துவங்கப்படவில்லை. எனவே, விவசாயிகளிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை, திரும்ப வழங்க வேண்டும்.
பணி முடக்கம்
கே.கிருஷ்ணன், புட்டிரெட்டிப்பட்டி: இணைமின் நிலையம் அமைக்கும் பணிக்காக, டன்னுக்கு, 90 ரூபாய் வீதம் பிடித்தம் செய்யப்பட்டது. கடந்த, 2009 - -10ல், 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஆட்சி மாற்றத்தால், இணைமின் நிலையம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
தற்போது, தி.மு.க., ஆட்சி நடந்து வரும் நிலையில் பணிகளும் துவங்கப்படவில்லை. பணமும் திருப்பி வழங்கப்படவில்லை. பிடித்தம் செய்த பணத்தை கொண்டு நிலம் மற்றும் நகை வாங்கியிருந்தால், அதன் மதிப்பீடு பல மடங்கு உயர்ந்திருக்கும். பணி துவங்காமல் உள்ள நிலையில் பணத்தை திரும்ப வழங்க வேண்டும்.