/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏரிகளை துார்வார யாரிடம் கேட்பது குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
/
ஏரிகளை துார்வார யாரிடம் கேட்பது குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
ஏரிகளை துார்வார யாரிடம் கேட்பது குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
ஏரிகளை துார்வார யாரிடம் கேட்பது குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
ADDED : அக் 19, 2024 03:00 AM
அரூர்: அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமை வகித்தார்.
இதில், ராஜ்குமார், வெங்கடேசன், உதயகுமார், சக்திவேல் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில், 'பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அலுமேலுபுரம் தடுப்பணையில் இருந்து, அலுமேலுபுரம், அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள, 5 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய்களை துார்வார கடந்த, ஓராண்டாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இது குறித்து பஞ்., நிர்வாகத்திடம் கேட்டால், பி.டி.ஓ., அலுவலகத்திற்கு செல்லுங்கள் என கூறுகின்றனர். அங்கு சென்றால், பொதுப்பணித்துறையினரிடம் கேளுங்கள் எனக் கூறுகின்றனர். அவர்களிடம் கேட்டால் ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்ல கூறுகின்றனர்.
கால்வாய்களை துார்வாருவது குறித்து நாங்கள் யாரிடம் தான் கேட்பது. அரூர் பகுதியிலுள்ள ஏரிகளில் மதுபாட்டில்கள் மற்றும் பாலிதீன் பைகள் குவிந்து, நீர்நிலைகள் மாசடைந்துள்ளன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பீணியாறு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். புதுப்பட்டி பகுதியிலுள்ள கோழிப்பண்ணையால் அப்பகுதியில் வசிப்பவர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். அரூரிலுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் செல்லும் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும்' என்றனர்.
தொடர்ந்து, ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், விவசாயிகளின் புகார் மற்றும் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தெரிவித்தார்.