sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விரட்டப்பட்ட யானைகள் மீண்டும் திரும்பியதால் விவசாயிகள் அதிர்ச்சி

/

விரட்டப்பட்ட யானைகள் மீண்டும் திரும்பியதால் விவசாயிகள் அதிர்ச்சி

விரட்டப்பட்ட யானைகள் மீண்டும் திரும்பியதால் விவசாயிகள் அதிர்ச்சி

விரட்டப்பட்ட யானைகள் மீண்டும் திரும்பியதால் விவசாயிகள் அதிர்ச்சி


ADDED : நவ 30, 2024 02:16 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில் இருந்து, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்ட யானைகள், மீண்டும் திரும்பி வந்த நிலையில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்-ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சான-மாவு காப்புக்காட்டில், 40க்கும் மேற்பட்ட யானைகள் சில நாட்க-ளாக முகாமிட்டிருந்தன. இவற்றை, தேன்கனிக்கோட்டை வழி-யாக கர்நாடகா மாநிலத்திற்கு விரட்டும் முயற்சியில், நேற்று முன்-தினம் இரவு வனத்துறையினர் ஈடுபட்டனர். கெலமங்கலம்-உத்த-னப்பள்ளி சாலையில் உள்ள போடிச்சிப்பள்ளி கிராமம் அருகே யானைகள் சென்ற போது, யானைகள் பயிர் சேதத்தை ஏற்படுத்தி-யதாக கூறி, வனத்துறையினரிடம் விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். அதனால், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு யானைகளை விரட்டும் பணி பாதிக்கப்பட்டு, யானைகள் மீண்டும் சானமாவு வனப்பகுதி நோக்கி திரும்பின.

காலை நேரம் நெருங்கி விட்டதால், யானைகள் சானமாவு வனப்-பகுதிக்கு செல்லாமல், போடிச்சிப்பள்ளி அருகே உள்ள வனப்

பகுதியிலேயே தஞ்ச

மடைந்தன. 15க்கும் மேற்பட்ட யானைகள் ஒரு குழுவாகவும், 25க்கும் மேற்பட்ட யானைகள் மற்றொரு குழுவாகவும் முகாமிட்-டுள்ளன. அவற்றை ஒன்றாக இணைத்து தேன்கனிக்கோட்டைக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள, 15க்கும் மேற்பட்ட யானைகள், பச்சப்பனட்டி கிராமத்திற்குள் புகுந்து, ராகி உட்பட பல்வேறு விவசாய பயிர்களை சேதப்படுத்-தின. அதேபோல், தாவரக்கரை வனப்பகுதியில் இருந்து வெளி-யேறிய கிரி என்ற ஒற்றை ஆண் யானை, கேரட்டி, கெரகூர் கிரா-மங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us