/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பையாறு அணை ஆலோசனை கூட்டம் தீர்மான நோட்டை கிழித்தெறிந்த விவசாயிகள்

ADDED : டிச 17, 2024 01:37 AM
தர்மபுரி, டிச. 17-
தொப்பூரிலுள்ள தொப்பையாறு அணை வலது மற்றும் இடதுபுற கால்வாய் பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம், நீர்வளத்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளர் மோகனப்பிரியா தலைமையில் நேற்று நடத்தது. இதில், தொப்பூர், கம்மம்பட்டி மற்றும் சேலம் மாவட்டம் வெள்ளார், தெத்திகிரிப்பட்டி,
மல்லிகுந்தம் ஆகிய பஞ்., பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள், துார்வாராத இடதுபுற கால்வாய் வழியாக, அணையில் இருந்து நீரை திறந்த அதிகாரிகளை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பாசன கால்வாய்களை தூர்வாரிய பின், அணையிலிருந்து நீர் திறப்பது குறித்து, முடிவெடுக்க வலியுறுத்தினர். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, டிச., 27-ல் பாசன கால்வாய்களில் நீர் திறக்க தீர்மானம் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து, தீர்மான நோட்டை கிழித்தெறிந்தனர். தொடர்ந்து, நீர் திறப்பு குறித்து, பாசன விவசாயிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு, முடிவெடுப்பதாக கூறி, விவசாயிகளை, அதிகாரிகள்
சமாதானம் செய்தனர்.