/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
/
தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : மே 12, 2025 02:42 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளி அருகே காட்டாறு செல்கிறது. மழைக்காலங்களில் வனப்பகுதிகளில் இருந்து வரும் நீரால், இந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக செல்கிறது.
இதனை தடுக்க, காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என, 25 ஆண்டுகளுக்கு மேலாக, விவசாயிகள் கோரிக்கை விடுத்து
வருகின்றனர். காட்டாற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டுவதன் மூலம், நரிப்பள்ளி, பெரியப்பட்டி ஆகிய இரண்டு பஞ்.,க்கு உட்-பட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.