தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : மார் 02, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 06:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொரப்பூர்: மொரப்பூர் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதியளவில் பெய்யாததால், நடப்பாண்டு, கோடை துவங்கும் முன்பே கடும் வறட்சி நிலவுகிறது. மேலும், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம், 1,200 அடிக்கு கீழ் சென்று விட்டது. இதனால், மொரப்பூர் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் கூட அமைக்க முடியாத நிலையுள்ளது. தற்போது, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கு குடிநீர் மற்றும் தீவனத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மொரப்பூர் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: மழைக்காலங்களில் தென்பெண்ணையாற்றில் செல்லும் வெள்ளநீர் மற்றும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக, கடலில் கலக்கிறது. இதை கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் வலதுபுற வாய்க்காலை, மொரப்பூர் வரை நீட்டிக்க, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், எம்.வெளாம்பட்டி அருகே செல்லும், தென்பெண்ணையாற்றின் குறுக்கே, செனாக்கல் என்னுமிடத்தில், தடுப்பணை கட்ட, கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தடுப்பணை கட்டுவது குறித்து, அதிகாரிகள் பலமுறை ஆய்வு நடத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டம் மூலம், மொரப்பூர், கடத்துார், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளிலுள்ள, 66 ஏரிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

இதையேற்று, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், இத்திட்டத்தை செயல்படுத்த, 410 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின், தி.மு.க., ஆட்சி அமைந்த நிலையில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த கோரி, விவசாயிகள் பலமுறை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்திய போதும் பணிகளை துவங்கவில்லை. எனவே, கிடப்பிலுள்ள இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us