/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 13, 2024 08:18 AM
அரூர்: அரூர் பகுதியில், பால் கொள்முதல் செய்வதற்கு அமுல் நிறுவ-னத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.தர்மபுரி மாவட்டம், அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., வில்சன் ராஜ-சேகர் தலைமை வகித்தார். இதில் திருமலை, முருகன், உதய-குமார் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், மத்திய, மாநில அர-சுகள் அறிவித்துள்ள நெல்லுக்கான கொள்முதல் விலை விவசாயி-களுக்கு கிடைக்கும் வகையில், அரூரில் நடப்பாண்டில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.அரூர்-சேலம் பிரதான சாலையில் இருந்து, டி.புதுாருக்கு செல்லும் தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும். 5 கி.மீ., துாரத்-திற்கு ஒரு கால்நடை மருந்தகம் திறக்க வேண்டும். தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை குறைத்துள்ளன. எனவே அரூர் பகுதியில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும். கே.ஈச்சம்பாடி தடுப்பணை கால்வாய்களை துார்வார வேண்டும்.அதிகாரப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அலுமேலுபுரம் பகுதிகளில் உள்ள ஏரிகளை துார்வார வேண்டும். வாணியாறு அணையின் இடதுபுற கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பீணி-யாற்றில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். விளைநி-லங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து வேளாண் பயிர்களை அதி-களவில் சேதம் செய்து வருகிறது. எனவே, காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த சத்தம் எழுப்புவதற்கு போலீஸ் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், விவசாயி-களின் புகார் மற்றும் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்-கப்படும் என தெரிவித்தார்.