/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டூ - வீலர் - வேன் மோதல் தந்தை, மகன் பரிதாப பலி
/
டூ - வீலர் - வேன் மோதல் தந்தை, மகன் பரிதாப பலி
ADDED : டிச 01, 2025 12:54 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், இருமத்துாரை சேர்ந்தவர் அருண்குமார், 39; தர்மபுரி தலைமை தபால் அலுவலக ஊழியர். இவரது மனைவி தமிழரசி, 36; தம்பதியின் மகன்கள் திருஞானம், 13, திரவுபதி சக்தி, 9; 'ஹீரோ பேஷன் புரோ' பைக்கில் மகன்களை அழைத்துக்கொண்டு, இருமத்துாரில் இருந்து தர்மபுரி நோக்கி அருண்குமார் நேற்று காலை சென்று கொண்டிருந்தார்.
திருப்பத்துார் - தர்மபுரி சாலையில், செங்கல்மேடு அருகே, 9:30 மணிக்கு சென்றபோது, பின்னால் வந்த 'டாடா ஏஸ்' சரக்கு வாகனம், பைக் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில், துாக்கி வீசப்பட்ட அருண்குமார், திருஞானம் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட திரவுபதி சக்தி, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிருஷ்ணாபுரம் போலீசார், தப்பியோடிய சரக்கு வாகன டிரைவரை தேடி வருகின்றனர்.

