ADDED : மே 29, 2026 03:13 AM
அ நிறம் | அளவு
அரூர்: அரூரில் இருந்து, கடத்துார் செல்லும் சாலையில், அன்னை அஞ்சுகம் நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே புளியமரம் ஒன்று உள்ளது. இதை சுற்றி வீடுகள் உள்ளன. இந்த புளிய மரத்தின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு, மரத்தின் வேர் பிடிமானம் இல்லாமல், ஆபத்தான நிலையில் உள்ளது.
காற்று பலமாக வீசினால், புளிய மரம் வேரோடு சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. ஏராளமான புளியமரங்கள் இதே நிலையில் உள்ளன. எனவே, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
