/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா
/
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா
ADDED : ஜூன் 26, 2025 01:26 AM
தர்மபுரி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு, பேரணி, தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டம், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைவேல் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அகிலன் அமிர்தராஜ், வெங்கடேசன், ரங்கன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாநில துணை தலைவர் இளங்குமரன் பேசினர்.
இதில், நில அளவை துறையில், பணிபுரியும் அனைத்து நிலையான அலுவலர்களுக்கும் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் மீது, தாக்குதல் நடத்தும் குற்றவாளிகள் மீது, கடுமையான நடவடிக்கை சட்டம் நிறைவேற்ற வேண்டும். அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அனைத்து நிலையான அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணி பளுவை கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு உச்சவரம்பு, 25 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
* பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தில் உள்ளிட்ட துணை தாசில்தார்கள், ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர்கள், சர்வேயர்கள் என, 160 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாலுகா அலுவலகம் வெறிச்சோடியது.