/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2025 01:46 AM
தர்மபுரி,:தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 16- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் மகேஷ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திருவருட்செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
துாய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை, 10,000 ரூபாயாக உயர்த்தி, பஞ்., மூலம் ஊதியத்தை வழங்க வேண்டும். மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை, தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம், 15,000 ரூபாய் வழங்க வேண்டும். பஞ்., செயலர்களை, தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும், அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். கணிணி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
சுகாதார ஊக்குனர்களுக்கு கிராம ஊராட்சி ஊதிய கணக்கில் ஊதியம் வழங்கி, அதை பிரதி மாதம் கடைசி வேலை நாளில் பெறும் வகையில், மண்டல ஏ.பி.டி.ஓ., மற்றும் கிராம ஊராட்சி செயலர் கையொப்பமிட வழிவகை செய்ய வேண்டும், என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.