/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மக்களுக்கு தீயணைப்பு துறை வெள்ள மீட்பு செயல்விளக்கம்
/
மக்களுக்கு தீயணைப்பு துறை வெள்ள மீட்பு செயல்விளக்கம்
மக்களுக்கு தீயணைப்பு துறை வெள்ள மீட்பு செயல்விளக்கம்
மக்களுக்கு தீயணைப்பு துறை வெள்ள மீட்பு செயல்விளக்கம்
ADDED : அக் 18, 2024 02:55 AM
அரூர், அக். 18-
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள், பாதிப்பு குறித்தும், அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் வருவாய்த்துறை, தீயணைப்பு துறைனர் சார்பில், நேற்று அரூர் அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணையில் ஒத்திகை நிகழ்வை நடத்தினர். அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமை வகித்து, மழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து, வெள்ள பகுதி மற்றும் ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, மீட்ட பின், அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி குறித்தும், பொதுமக்களுக்கு தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில், அரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.