/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெள்ளியணை அருகே பஞ்சு குடோனில் தீ
/
வெள்ளியணை அருகே பஞ்சு குடோனில் தீ
ADDED : ஜூலை 30, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வெள்ளியணை அருகே, பஞ்சு உற்பத்தி குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், ராயனுார் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார், 48; இவர், வெள்ளியணை அருகே வால்காட்டு புதுாரில், 10 ஆண்டுகளாக பஞ்சு உற்பத்தி குடோன் நடத்தி வருகிறார். அதில், 20 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பஞ்சு உற்பத்தி செய்யும் மிஷினில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. கரூர் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். தீ விபத்தில் பஞ்சு மூட்டைகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு குறித்து, வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்