ADDED : பிப் 24, 2026 10:17 AM
அ நிறம் | அளவு
அரூர்: அரூர் வருவாய்கோட்டத்தில், அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, மொரப்பூர் ஆகிய, 4 வனச்சரகங்கள் உள்ளன.
இதில், மான், காட்டுப் பன்றி, காட்டெருமை, குரங்கு, மயில், முயல் உள்ளிட்டவன விலங்குகள் உள்ளன. கோடை காலம் துவங்கவுள்ள நிலையில் வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், வனத்தில் உள்ள மரம் மற்றும் செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று கோட்டப்பட்டி மயானம் அருகிலுள்ள வனப்பகுதியில் தீ ஏற்பட்டது. இதில், மரம் மற்றும் செடி, கொடிகள் எரிந்து நாசமானது.
