தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

அரசு பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு


ADDED : மார் 05, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி தீயணைப்பு மீட்பு பணி நிலையம் சார்பாக, தர்மபுரி அருகேவுள்ள இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில், 6 முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு தீ விபத்தின் போது, அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், உயரமான மாடி கட்டடங்கள், நீர்நிலைகள், காஸ் கசிவுகள் போன்றவற்றில் சிக்கிக்கொள்பவர்களை மீட்பவர்களை பாதிப்புகளை எதிர்கொள்வது பற்றியும் அதிலிருந்து உயிர்கள் மற்றும் உடமைகளை மீட்பது குறித்து, தர்மபுரி தீயணைப்பு மாவட்ட அலுவலர் அம்பிகா தலைமையில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்ட மாணவியருக்கு வினாடி - வினா போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் உட்பட பலர் உடனிருந்தனர்.* பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை சார்பில், சாமியாபுரம் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு நேற்று பயிற்சி வகுப்பு, போட்டி நடத்தப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us