sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வீடுகளில் புகுந்த 6 பாம்புகள் தீயணைப்பு துறையினர் மீட்பு

/

வீடுகளில் புகுந்த 6 பாம்புகள் தீயணைப்பு துறையினர் மீட்பு

வீடுகளில் புகுந்த 6 பாம்புகள் தீயணைப்பு துறையினர் மீட்பு

வீடுகளில் புகுந்த 6 பாம்புகள் தீயணைப்பு துறையினர் மீட்பு


ADDED : டிச 01, 2024 01:37 AM

Google News

ADDED : டிச 01, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீடுகளில் புகுந்த 6 பாம்புகள்

தீயணைப்பு துறையினர் மீட்பு

தர்மபுரி, டிச. 1-

நல்லம்பள்ளி அடுத்த ஓசஹள்ளி புதுாரிலுள்ள ஒரு வீட்டில், பாம்பு ஒன்று புகுந்தது. தர்மபுரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் சென்று வீட்டிலிருந்த, 5 அடி நீள சாரைப்பாம்பை உயிருடன் மீட்டனர். பாலக்கோடு அடுத்த கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தில் ஒரு வீட்டில் பாம்பை மீட்டனர். நல்லம்பள்ளி அடுத்த வெத்தலைக்காரன் கொட்டாயில் உள்ள ஒரு வீட்டில், 4 அடி நீள நாகப்பாம்பை உயிருடன் மீட்டனர். சோகத்துார் கூட்ரோடு அருகே உள்ள ஒரு வீட்டில், 5 அடி நீள சாரைப்பாம்பை மீட்டனர்.

இதேபோல், தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று மட்டும், 6 பாம்புகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர். கூண்டில் அடைக்கப்பட்டிருந்த இந்த பாம்புகளை, தர்மபுரி மாவட்ட வனத்துறையினரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். வனத்துறையினர், தொப்பூர் வனப்பகுதி காப்புக்காட்டில் விட்டனர்.






      Dinamalar
      Follow us