ADDED : ஆக 31, 2026 02:40 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்களில், பணியாற்றும் பாதுகாவலர்களுக்கு, பாப்பிரெட்-டிப்பட்டி தீயணைப்பு அலுவலகத்தில், துறையினர் வாயிலாக தீத்-தடுப்பு பயிற்சி கடந்த, 2 நாட்கள் நடந்தது. அதன்படி, பாப்பி-ரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையில், கடந்த, 2 நாட்கள் தனியார் செக்யூ-ரிட்டி பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
அவர்கள், தாங்கள் பணியாற்றும் இடங்களில் தீ விபத்துகள் ஏற்ப-டாமல், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தீ விபத்துக்கள் ஏற்பட்டால், தீயணைப்புத்துறையினர் விபத்து நடந்த இடத்துக்கு வரும் முன், மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் வழங்கப்பட்-டன. விபத்துகளின் போது இந்த தீத்தடுப்பு முறைகளை பாதுகா-வலர் தவறாமல் பயன்படுத்த, தீயணைப்புத்துறையினர் அறிவுறுத்தினர்.
