ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்குமுதல்கட்ட பயிற்சி வகுப்பு
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்குமுதல்கட்ட பயிற்சி வகுப்பு
ADDED : மார் 29, 2026 02:45 AM
பாப்பிரெட்டிப்பட்டி :பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் பணியாற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு பி.பள்ளிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன் தலைமையில் நடந்தது. பயிற்சியை டி.ஆர்.ஓ., கவிதா ஆய்வு செய்தார். பின் வகுப்புகளில் மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைத்து, அதில் ஓட்டுப்பதிவு நிலைய அலுவலர்கள், தேர்தல் முறையை புரிந்து கொண்டு பிழையற்ற தேர்தல் செயல் முறையை உறுதி செய்ய வேண்டும்.
ஓட்டுப்பதிவு நாளன்று ஓட்டுப்பதிவு முடிவடைந்தவுடன் முறையாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகள், உள்ளிட்டவற்றை உரிய அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஓட்டுப்பதிவு நடைமுறைகளில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டாலோ ஓட்டுப்பதிவில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலும் உரிய மேல்நிலை அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் இல்லாமல் ஓட்டுப்பதிவு நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன், தேர்தல் துணை தாசில்தார் சுதேஸ்வரி, முதுநிலை ஆர்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
