/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆடிப்பெருக்கு எதிரொலி பூக்கள் விலை உயர்வு
/
ஆடிப்பெருக்கு எதிரொலி பூக்கள் விலை உயர்வு
ADDED : ஆக 03, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் :சுபமுகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூக்களின் விற்பனையும், விலையும் அதிகரித்துள்ளது.அரூரில் நேற்று முன்தினம் ஒரு கிலோ சாமந்தி, 140, செண்டுமல்லி, 40, குண்டு
மல்லி, 340, முல்லை, 340, கோழிக்கொண்டை, 60, ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று விலை உயர்ந்து, சாமந்தி, 240, செண்டுமல்லி, 100, குண்டுமல்லி, 400, முல்லை, 400, கோழிக்கொண்டை, 100 ரூபாய்க்கு விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர். அதே போல், பூ மாலைகள் ஒவ்வொன்றும் வழக்கத்தை விட, 50 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.