தர்மபுரி : தை அமாவாசையை முன்னிட்டு, பூக்கள் விலை உயர்வு காணப்பட்டது. சன்னமல்லி, ஒரு கிலோ, 1,000 ரூபாய் என விற்பனையானது.
தர்மபுரி பூ மார்க்கெட்டில், 2 நாட்களுக்கு முன்பு வரை, விலை வீழ்ச்சியில் இருந்த பூக்கள் நேற்று, தை அமாவாசையையொட்டி, விலையில் உயர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்டம் முழுவதும், சாகுபடி செய்யும் மலர்களை, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வரும், பூ மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். பண்டிகை காலங்கள், அமாவாசை, பவுர்ணமி மற்றும் திருவிழா காலங்களில், பூக்கள் விலை உச்சத்தை தொடும். அதேபோல், கடந்த, 2 நாட்களுக்கு முன் ஒரு கிலோ சாமந்தி, 20 ரூபாய்க்கும், சம்பங்கி, 10; பன்னீர் ரோஸ், 20; கோழிகொண்டை, 20, ரூபாய், என விலை குறைந்தது. நேற்று, தை அமாவாசை என்பதால், பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
இதில், ஒரு கிலோ சாமந்தி, 120 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ், 120; குண்டுமல்லி, 800; சன்னமல்லி, 1,000 ரூபாய், ஜாதிமல்லி, 500; கனகாம்பரம், 500; அரளி, 140 ரூபாய் என விற்பனையானது